Saturday, August 25, 2018

மக்கள் மன்றம் 2


அரசியலாரிடமிருந்து நம் உரிமையை காப்போம்:

பங்கேற்புமுறை ஜனநாயகத்திற்கு பயணிப்பதைப் பற்றிய என் முந்தைய பதிவின் தொடற்சி.
5 தளங்கள் (லெவல்) முறையே 250, 2,500, 25,000, 250,000, 1,500,000 வாக்காளர்களுக்கான மக்கள் மன்றங்கள் அமைத்து மக்கள் வெட்பாளர்களை தேர்வு செய்வதைப் பற்றிக் கூறியிருந்தேன். அந்தக் குழுக்கள் மேலும் கீழுமாக கலந்தாய்ந்து வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என்று கூறியிருந்தேன். அதையும் எப்படி முறைப்படுத்துவது என்ற என் சிந்தனையை இங்கு அளிக்கின்றேன்.

லெவல் 1 இல் – 250 வாக்காளர்களின், (60 வீடுகளின்) ப்ரதிநிதிகள் கூடி அந்த 250 பேருக்கான ப்ரதிநிதியைத்தான் தேர்ந்தெடுத்து அடுத்த லெவலுக்கு அனுப்புவார்கள் – மொத்த தொகுதிக்குமான வேட்பாளர் பரிந்துரையை அல்ல.
இதே போல் அடுத்தடுத்த லெவலுக்கும் ப்ரதிநிதிகள் அனுப்பப்படுவர்.

சட்டமன்ற வேட்பாளரை தேர்வு செய்ய – ஒவ்வொரு தொகுதி மக்கள் மன்றத்திலும் (லெவல் 4 இல்) உள்ள
10 ப்ரதிநிதிகள் கலந்து 6 – 8 வேட்பாளர்கள் பரிந்துரைப் பட்டியல் தயாரித்து, அவர்களை சந்தித்து அவர்களின் ஒப்புதலின் பேரில், 5 பெயரை எந்த வரிசையிலும் இல்லாமல் – அல்ஃபபெடிகல் ஆர்டரில் (அல்) மட்டும் – லெவல் (லெ) 3 க்கு (10 குழுக்களுக்கு) அனுப்புவர். இந்த வேட்பாளர் பட்டியலுக்கு மன்றப்ரதிநிதிகளை தவிர்த்து தொகுதியில் வசிக்கும் மற்றவர்களிலிருந்ததான் தேர்வு செய்ய வேண்டும். இது உள் அரசியலை தவிர்பதற்கான ஏற்பாடு. தகுதிகள் மன்ற ப்ரதிநிதிகளுக்கு முன் கூறிய முறையில் இருத்தல் வேண்டும்.

லெ 3 இல் ஒவ்வொரு குழுவிலும் உள்ள 10 பேர், பேசி 4 பெயரை வரிசைப்படுத்தி – முதல், இரண்டாம், மூன்றாம் ப்ரிஃபரென்ஸ் (ப்ரி) என்று எழுதி மீண்டும் லெ 4 க்கு அனுப்புவர். லெ 4 இல், 10 லெ 3 குழுக்களின் தேர்வையும், முதல் ப்ரிக்கு 100%, இரண்டிற்கு 50% மூன்றிற்கு 25% என்று கொண்டு, கூட்டி புதுப்பட்டியல் தயாரித்து அதிலிருந்து முதல் 4 ப்ரியை மட்டும் – அல் - லெ 2 (100 குழுக்கள்) க்கு லெ 3 இன் வழியே அனுப்புவர்.

லெ 2 இல் தங்கள் தேர்வை மேற்கூறியது போல் 3 ப்ரியை மீண்டும் லெ 1 க்கு 3 இன் வழியே அனுப்புவர். லெ 4 இல் மேற்கூறியது போல் கூட்டி, 3 ப்ரியை மட்டும் – அல் – லெ 1 (1000 குழுக்கள்) க்கு அனுப்புவர்.

லெ 1 இல் கூடிப்பேசி, குரல் தேர்வு மூலம், இரண்டு பெயரை வரிசைப் படுத்தி மீண்டும் லெ 2, லெ 3 வழியே லெ 4 க்கு அனுப்புவர். லெ 4 இல் மேற்கூறியது போல் கூட்டி, முதல் மற்றும் இரண்டாம் ப்ரியை தேர்வு செய்வர். முதலாமவர் தான் மக்கள் வேட்பாளராக களம் இறங்கப் போகிறவர். இரண்டாமவர் முதலாமவர் பின்வாங்கும் அல்லது நியமனம் நிராகறிக்கப்படும் பக்ஷத்தில் மக்கள் வேட்பாளராக களம் இரங்குவார்.

நாடாளுமன்ற வேட்பாளர் தேர்தலுக்கு மேற்கண்ட முறையில் லெ 5 இல் துவங்கி செயல்படுத்த வேண்டும்.

அடிப்படையில் இந்த செயல் முறையில் வேட்பாளர்கள் சேவைக்காக – கொள்ளையடிக்க அல்லாமல் -தேர்தெடுக்கப்படுவதால், அவர்களுக்கு இது ஒரு வரமல்ல, ஒரு சுமைதான். அதனால் இதற்கு நேர்மையானவர்கள் மட்டுமே முன்வருவர். அவர்கள் பதவி கிடைத்தாலும், கிடைக்காவிடாலும் சேவையை தொடரும் மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். அதனால் இந்த தேர்வில் பெரும் போட்டியும், சிக்கல்களும் இருக்காது.

இதில் முக்கிய மான வேலையே மக்களை கூட்டுவதுதான். ஆனால் சிறு குழுக்களாக – 250 வாக்காளர்கள், 60 வீடுகளில் – கூட்டுவது அவ்வளவு கடினமல்ல. மக்களுக்கு தங்கள் ப்ரதிநிதியாகப் போகிறவரை தாங்களே தேர்வு செய்யப் போகிறோம் என்ற சிந்தனை ஏற்பட்டவுடன் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இதில் ஈடுபட முன்வருவர்.

அரசியல் கட்சிகள் மக்களின் ஒற்றுமையை உடைக்க முற்படுவர். ஆனால் மக்களின் எழுச்சிக் கோலத்தைக் கண்டு அவர்களுக்கு மிரண்டு ஓடுவதைத் தவிர வேறு வழியிருக்காது.

மக்கள் கொதித்தெழுந்தால் சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சியடையும் என்பதற்கு சரித்திரத்தில் பல சான்றுகள் உள்ளன.

இன்னும் என்ன தயக்கம் தோழர்களே? வாருங்கள் கையில் ஒளிதீபம் ஏந்தி!

அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கும், அறியாமையிலிருந்து அறிவுடமைக்கும் (இருளிலிருந்து வெளிச்சத்திற்கும்), அழிவிலிருந்து அழியா நிலைக்கும், எம்மை வழிநடத்துவாய் ஆண்டவனே – உபநிஷத்.


No comments:

Post a Comment