மக்கள் மன்றங்கள்
அமைப்பின்
சுறுக்கம். தமிழ் நாட்டை உதாரணமாகக் கொண்டது.
தளம்
5 – நாடாளுமன்றத் தொகுதி மக்கள் மன்றம் – 1,500,000 வாக்காளர்களின்
ப்ரதிநிதித்துவம் கொண்டது – அந்த நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத்
தொகுதிகளின் ப்ரதிநிதிகள் கொண்டது.
தளம்
4 – மாநில சட்டமன்றத் தொகுதி மக்கள் மன்றம் – 250,000 – 10 தளம் 3 - பெரிய ஏரியா
மம ப்ரதிநிதிகள்.
தளம்
3 – பெரிய ஏரியா மக்கள் மன்றம் – சென்னையில் உள்ளாட்சி வார்ட் – சிறிய நகரங்களில்
ஒன்றுக்கு மேற்பட்ட வார்டுகள். க்ராமப்பகுதிகளில் 8 – 10 க்ராமங்கள் – 25000 – 10
தளம் 2 – ஏரியா மம ப்ரதிநிதிகள்.
தளம்
2 – ஏரியா மக்கள் மன்றம் – க்ராமங்களில் க்ராம மம – 2500 – 10 தளம் 1 – தெரு/
குடியிருப்பு/ க்ராம வார்ட் மம.
தளம்
1 – தெரு, அடுக்கு மாடிக் குடியிருப்பு, க்ராம வார்ட் மக்கள் மன்றம் – 200 – 250
வாக்காளர்கள் (60 – 75 குடும்பங்கள்)
தளம்
3,2,1 இல் வார்ட்களின் வாக்காளர் தொகைக்குத் தகுந்து எண்ணிக்கை மாறுபடும்.
உதா: ஒரு
க்ராமத்தில் 450 பேர் கொண்ட வார்ட் என்றால், இரண்டு குழுவாக 225 வாக்காளர்கள்
கொண்டதாக தளம் 1 இருக்கும்.
5000
பேர் கொண்ட க்ராமத்தில், 18 - 20 குழுக்களாக செயல்படும். தளம் 2 இல் 5000 பேரை –
க்ராம வாக்காளர்களை - குறிக்கும்.
15000
பேர் கொண்ட வார்ட் உள்ள நகரங்களில் தளம் 3 க்கு, தளம் 2 இலிருந்து 6 ப்ரதிநிதிகள்.
மற்ற
மாநிலங்களில் தளம் 4 இல் சட்ட மன்றத் தொகுதி வாக்காளர்களை கொண்டதாக இருக்கும்.
உதா: சமதொ வுக்கு 1 லக்ஷம் வாக்காளர்கள் என்றால், தளம் 4 மம 1 ல வை குறிக்கும்.
தளம் 5 க்கு, 15 த 4 ப்ரதிநிதிகள்.
தளம்
1 இலிருந்து ஒரு ப்ரதிநிதி (அவர்களுக்குள்ளேயே) தேர்வு செய்து தளம் 2 க்கு அனுப்ப
வேண்டும். அதே போல் 2 இலிருந்து, 3 க்கும், 3 இலிருந்து 4 க்கும், 4 இலிருந்து 5
க்கும்.
தளம்
5 மம உறுப்பினர்கள் அந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு மக்கள் வேட்பாளரை தேர்வு
செய்வர். 2 - 3 பேரை பரிந்துரைத்து கீழே உள்ள தளங்களுடன் கலந்தாய்ந்து, அவர்களின்
பரிந்துரை பெற்று இறுதியான தேர்வு செய்யப்படும்.
இதே
போல் தளம் 4 மம உறுப்பினர்கள் அந்த சட்ட மன்றத்திற்கும், தளம் 3 மம உறுபினர்கள்
நகரங்களில் உள்ளாட்சிமன்றத் தொகுதிக்கும், தளம் 2 மம சிற்றூர்களிலும், தளம் 1 மம
க்ராமங்களின் வார்ட் வேட்பாளர்களையும் தேர்வு செய்வர்.
வேட்பாளர்
தேர்வைத் தவிர இவர்கள் மக்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு பாலமாகவும், அரசு
செயலிழந்த தருணக்களில் பொதுப் பணிகளை முன்வந்து செய்யவும், அரசு பணிகளில் அரசுக்கு
உருதுணையாகவும், அரசு ஊழலின்றி செயல்பட கண்காணிப்பாளர்களாகவும், இருக்கத்
தகுதி படைத்தவர்களாக இருப்பார்கள்.
இதனால்
ஒரு வலிமையான மக்கள் நலக் கட்டமைப்பு உருவாகும். மக்கள் ஆதரவின்றி, மக்கள்
விரோதமாக எந்த ஆட்சியாளரும், செயல்பட முடியாது. மம ப்ரதிநிதிகள் கூட மக்கள் விரோத
செயல்களில் ஈடுபட்டால் அவர்களை அகற்றும் உரிமை அவர்களை தேர்வு செய்த
வாக்காளர்களுக்கு இருக்கும். அரசு சட்டங்கள், திட்டங்களுக்கு இந்த அமைப்பின் மூலம்
கருத்துக் கணிப்பு செய்ய முடியும்.
இந்த
மக்கள் மன்றங்கள் அமைப்பு ஏற்படுத்த எந்த வித சட்ட மாற்றமும் – அரசியல்
சாசனத்திலோ, ஆர் பீ ஏ விலோ தேவை இல்லை.
இந்த
அமைப்பை உருவாக்குவதன் மூலம் நாம் உலகுக்கே ஒரு சீரிய உதாரணமாகத் திகழ்வோம்.
இன்னும்
என்ன தயக்கம்?
மேலும்
விவரம் இந்த ப்ளாக்கின் மற்றொரு பதிவில்.
ராஜ ராஜன்
(A technologist by
qualification, farmer by option and a Gandhian by conviction)
காந்தீய சமுதாய மேம்பாட்டு முனைப்பு
முகநூல்: Raja Rajan K,
ப்ளாக்:
prithvi-mithra.blogspot.in
No comments:
Post a Comment