Saturday, August 25, 2018

மக்கள் மன்றம் 2


அரசியலாரிடமிருந்து நம் உரிமையை காப்போம்:

பங்கேற்புமுறை ஜனநாயகத்திற்கு பயணிப்பதைப் பற்றிய என் முந்தைய பதிவின் தொடற்சி.
5 தளங்கள் (லெவல்) முறையே 250, 2,500, 25,000, 250,000, 1,500,000 வாக்காளர்களுக்கான மக்கள் மன்றங்கள் அமைத்து மக்கள் வெட்பாளர்களை தேர்வு செய்வதைப் பற்றிக் கூறியிருந்தேன். அந்தக் குழுக்கள் மேலும் கீழுமாக கலந்தாய்ந்து வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என்று கூறியிருந்தேன். அதையும் எப்படி முறைப்படுத்துவது என்ற என் சிந்தனையை இங்கு அளிக்கின்றேன்.

லெவல் 1 இல் – 250 வாக்காளர்களின், (60 வீடுகளின்) ப்ரதிநிதிகள் கூடி அந்த 250 பேருக்கான ப்ரதிநிதியைத்தான் தேர்ந்தெடுத்து அடுத்த லெவலுக்கு அனுப்புவார்கள் – மொத்த தொகுதிக்குமான வேட்பாளர் பரிந்துரையை அல்ல.
இதே போல் அடுத்தடுத்த லெவலுக்கும் ப்ரதிநிதிகள் அனுப்பப்படுவர்.

சட்டமன்ற வேட்பாளரை தேர்வு செய்ய – ஒவ்வொரு தொகுதி மக்கள் மன்றத்திலும் (லெவல் 4 இல்) உள்ள
10 ப்ரதிநிதிகள் கலந்து 6 – 8 வேட்பாளர்கள் பரிந்துரைப் பட்டியல் தயாரித்து, அவர்களை சந்தித்து அவர்களின் ஒப்புதலின் பேரில், 5 பெயரை எந்த வரிசையிலும் இல்லாமல் – அல்ஃபபெடிகல் ஆர்டரில் (அல்) மட்டும் – லெவல் (லெ) 3 க்கு (10 குழுக்களுக்கு) அனுப்புவர். இந்த வேட்பாளர் பட்டியலுக்கு மன்றப்ரதிநிதிகளை தவிர்த்து தொகுதியில் வசிக்கும் மற்றவர்களிலிருந்ததான் தேர்வு செய்ய வேண்டும். இது உள் அரசியலை தவிர்பதற்கான ஏற்பாடு. தகுதிகள் மன்ற ப்ரதிநிதிகளுக்கு முன் கூறிய முறையில் இருத்தல் வேண்டும்.

லெ 3 இல் ஒவ்வொரு குழுவிலும் உள்ள 10 பேர், பேசி 4 பெயரை வரிசைப்படுத்தி – முதல், இரண்டாம், மூன்றாம் ப்ரிஃபரென்ஸ் (ப்ரி) என்று எழுதி மீண்டும் லெ 4 க்கு அனுப்புவர். லெ 4 இல், 10 லெ 3 குழுக்களின் தேர்வையும், முதல் ப்ரிக்கு 100%, இரண்டிற்கு 50% மூன்றிற்கு 25% என்று கொண்டு, கூட்டி புதுப்பட்டியல் தயாரித்து அதிலிருந்து முதல் 4 ப்ரியை மட்டும் – அல் - லெ 2 (100 குழுக்கள்) க்கு லெ 3 இன் வழியே அனுப்புவர்.

லெ 2 இல் தங்கள் தேர்வை மேற்கூறியது போல் 3 ப்ரியை மீண்டும் லெ 1 க்கு 3 இன் வழியே அனுப்புவர். லெ 4 இல் மேற்கூறியது போல் கூட்டி, 3 ப்ரியை மட்டும் – அல் – லெ 1 (1000 குழுக்கள்) க்கு அனுப்புவர்.

லெ 1 இல் கூடிப்பேசி, குரல் தேர்வு மூலம், இரண்டு பெயரை வரிசைப் படுத்தி மீண்டும் லெ 2, லெ 3 வழியே லெ 4 க்கு அனுப்புவர். லெ 4 இல் மேற்கூறியது போல் கூட்டி, முதல் மற்றும் இரண்டாம் ப்ரியை தேர்வு செய்வர். முதலாமவர் தான் மக்கள் வேட்பாளராக களம் இறங்கப் போகிறவர். இரண்டாமவர் முதலாமவர் பின்வாங்கும் அல்லது நியமனம் நிராகறிக்கப்படும் பக்ஷத்தில் மக்கள் வேட்பாளராக களம் இரங்குவார்.

நாடாளுமன்ற வேட்பாளர் தேர்தலுக்கு மேற்கண்ட முறையில் லெ 5 இல் துவங்கி செயல்படுத்த வேண்டும்.

அடிப்படையில் இந்த செயல் முறையில் வேட்பாளர்கள் சேவைக்காக – கொள்ளையடிக்க அல்லாமல் -தேர்தெடுக்கப்படுவதால், அவர்களுக்கு இது ஒரு வரமல்ல, ஒரு சுமைதான். அதனால் இதற்கு நேர்மையானவர்கள் மட்டுமே முன்வருவர். அவர்கள் பதவி கிடைத்தாலும், கிடைக்காவிடாலும் சேவையை தொடரும் மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். அதனால் இந்த தேர்வில் பெரும் போட்டியும், சிக்கல்களும் இருக்காது.

இதில் முக்கிய மான வேலையே மக்களை கூட்டுவதுதான். ஆனால் சிறு குழுக்களாக – 250 வாக்காளர்கள், 60 வீடுகளில் – கூட்டுவது அவ்வளவு கடினமல்ல. மக்களுக்கு தங்கள் ப்ரதிநிதியாகப் போகிறவரை தாங்களே தேர்வு செய்யப் போகிறோம் என்ற சிந்தனை ஏற்பட்டவுடன் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இதில் ஈடுபட முன்வருவர்.

அரசியல் கட்சிகள் மக்களின் ஒற்றுமையை உடைக்க முற்படுவர். ஆனால் மக்களின் எழுச்சிக் கோலத்தைக் கண்டு அவர்களுக்கு மிரண்டு ஓடுவதைத் தவிர வேறு வழியிருக்காது.

மக்கள் கொதித்தெழுந்தால் சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சியடையும் என்பதற்கு சரித்திரத்தில் பல சான்றுகள் உள்ளன.

இன்னும் என்ன தயக்கம் தோழர்களே? வாருங்கள் கையில் ஒளிதீபம் ஏந்தி!

அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கும், அறியாமையிலிருந்து அறிவுடமைக்கும் (இருளிலிருந்து வெளிச்சத்திற்கும்), அழிவிலிருந்து அழியா நிலைக்கும், எம்மை வழிநடத்துவாய் ஆண்டவனே – உபநிஷத்.


Thursday, August 23, 2018

மக்கள் மன்றங்கள்


மக்கள் மன்றங்கள்
அமைப்பின் சுறுக்கம். தமிழ் நாட்டை உதாரணமாகக் கொண்டது.

தளம் 5 – நாடாளுமன்றத் தொகுதி மக்கள் மன்றம் – 1,500,000 வாக்காளர்களின் ப்ரதிநிதித்துவம் கொண்டது – அந்த நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளின் ப்ரதிநிதிகள் கொண்டது.
தளம் 4 – மாநில சட்டமன்றத் தொகுதி மக்கள் மன்றம் – 250,000 – 10 தளம் 3 - பெரிய ஏரியா மம ப்ரதிநிதிகள்.
தளம் 3 – பெரிய ஏரியா மக்கள் மன்றம் – சென்னையில் உள்ளாட்சி வார்ட் – சிறிய நகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வார்டுகள். க்ராமப்பகுதிகளில் 8 – 10 க்ராமங்கள் – 25000 – 10 தளம் 2 – ஏரியா மம ப்ரதிநிதிகள்.
தளம் 2 – ஏரியா மக்கள் மன்றம் – க்ராமங்களில் க்ராம மம – 2500 – 10 தளம் 1 – தெரு/ குடியிருப்பு/ க்ராம வார்ட் மம.
தளம் 1 – தெரு, அடுக்கு மாடிக் குடியிருப்பு, க்ராம வார்ட் மக்கள் மன்றம் – 200 – 250 வாக்காளர்கள் (60 – 75 குடும்பங்கள்)

தளம் 3,2,1 இல் வார்ட்களின் வாக்காளர் தொகைக்குத் தகுந்து எண்ணிக்கை மாறுபடும்.
உதா: ஒரு க்ராமத்தில் 450 பேர் கொண்ட வார்ட் என்றால், இரண்டு குழுவாக 225 வாக்காளர்கள் கொண்டதாக தளம் 1 இருக்கும்.
5000 பேர் கொண்ட க்ராமத்தில், 18 - 20 குழுக்களாக செயல்படும். தளம் 2 இல் 5000 பேரை – க்ராம வாக்காளர்களை - குறிக்கும். 
15000 பேர் கொண்ட வார்ட் உள்ள நகரங்களில் தளம் 3 க்கு, தளம் 2 இலிருந்து 6 ப்ரதிநிதிகள்.

மற்ற மாநிலங்களில் தளம் 4 இல் சட்ட மன்றத் தொகுதி வாக்காளர்களை கொண்டதாக இருக்கும். உதா: சமதொ வுக்கு 1 லக்ஷம் வாக்காளர்கள் என்றால், தளம் 4 மம 1 ல வை குறிக்கும். தளம் 5 க்கு, 15 த 4 ப்ரதிநிதிகள்.   

தளம் 1 இலிருந்து ஒரு ப்ரதிநிதி (அவர்களுக்குள்ளேயே) தேர்வு செய்து தளம் 2 க்கு அனுப்ப வேண்டும். அதே போல் 2 இலிருந்து, 3 க்கும், 3 இலிருந்து 4 க்கும், 4 இலிருந்து 5 க்கும்.

தளம் 5 மம உறுப்பினர்கள் அந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு மக்கள் வேட்பாளரை தேர்வு செய்வர். 2 - 3 பேரை பரிந்துரைத்து கீழே உள்ள தளங்களுடன் கலந்தாய்ந்து, அவர்களின் பரிந்துரை பெற்று இறுதியான தேர்வு செய்யப்படும்.
இதே போல் தளம் 4 மம உறுப்பினர்கள் அந்த சட்ட மன்றத்திற்கும், தளம் 3 மம உறுபினர்கள் நகரங்களில் உள்ளாட்சிமன்றத் தொகுதிக்கும், தளம் 2 மம சிற்றூர்களிலும், தளம் 1 மம க்ராமங்களின் வார்ட் வேட்பாளர்களையும் தேர்வு செய்வர்.  

வேட்பாளர் தேர்வைத் தவிர இவர்கள் மக்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு பாலமாகவும், அரசு செயலிழந்த தருணக்களில் பொதுப் பணிகளை முன்வந்து செய்யவும், அரசு பணிகளில் அரசுக்கு உருதுணையாகவும், அரசு ஊழலின்றி செயல்பட கண்காணிப்பாளர்களாகவும்இருக்கத் தகுதி படைத்தவர்களாக இருப்பார்கள்.

இதனால் ஒரு வலிமையான மக்கள் நலக் கட்டமைப்பு உருவாகும். மக்கள் ஆதரவின்றி, மக்கள் விரோதமாக எந்த ஆட்சியாளரும், செயல்பட முடியாது. மம ப்ரதிநிதிகள் கூட மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்களை அகற்றும் உரிமை அவர்களை தேர்வு செய்த வாக்காளர்களுக்கு இருக்கும். அரசு சட்டங்கள், திட்டங்களுக்கு இந்த அமைப்பின் மூலம் கருத்துக் கணிப்பு செய்ய முடியும். 

இந்த மக்கள் மன்றங்கள் அமைப்பு ஏற்படுத்த எந்த வித சட்ட மாற்றமும் – அரசியல் சாசனத்திலோ, ஆர் பீ ஏ விலோ தேவை இல்லை.
இந்த அமைப்பை உருவாக்குவதன் மூலம் நாம் உலகுக்கே ஒரு சீரிய உதாரணமாகத் திகழ்வோம்.

இன்னும் என்ன தயக்கம்?

மேலும் விவரம் இந்த ப்ளாக்கின் மற்றொரு பதிவில்.

ராஜ ராஜன்
(A technologist by qualification, farmer by option and a Gandhian by conviction)
காந்தீய சமுதாய மேம்பாட்டு முனைப்பு
தொ பே: 94441 60839,     மின் அஞ்சல்: letsbelldcat@gmail.com
முகநூல்: Raja Rajan K,    ப்ளாக்: prithvi-mithra.blogspot.in

அரசியலாரிடமிருந்து நம் உரிமையை காப்போம்:


தோழர்களே!

பாராளுமன்றம், சட்ட மன்றங்கள், உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் வெகு தொலைவில் எப்போதும் இருப்பதில்லை. நாம் பலகாலமாக ஏங்கிவரும் ‘தீய அரசியலிலிருந்து தூய அரசியலுக்கு பயணிக்க’ த் தேவையான வழித்தட வரைவு கீழே அளிக்கப்பட்டுள்ளது.

சமூக அரசியல் ஆர்வலர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தனித்தும், கூடியும் இந்தப் பயணத்தைத் துவக்கி தேர்தல்கள் வருமுன் தயார் நிலையில் இருப்பது மிக அவசியம்.

அரசியலாரிடமிருந்து நம் உரிமையை காப்போம்:
‘மக்கள் சுய ஆட்சி அதிகாரம்’ பெற – ‘கூடி, தேடி, தெரிந்தெடுத்து, நியமித்து, தேர்ந்தெடுக்கும் முறை’
செயல் வரைவு:

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள எல்லா சமூக அரசியல் ஆர்வலர்களும் கூடிப்பேசி செயல்படுத்த வேண்டிய விரிவான வழித்தட வரைவு இயற்ற வேண்டும்.

‘வேரூன்றிய கட்சித்தலைமை நியமிக்கும் வெட்பாளர்களால், அந்த கட்சிக்கும் அவர்கள் பின்நின்று ஆட்டுவிக்கும் பண மூட்டைகளுக்கும்தான் அவர்கள் செய்யும் ஊழலுக்கும், அராஜகத்திற்கும், ப்ரதிநிதிகளாக செயல்பட முடியும் என்பதனால் அவர்களை நிராகரித்து, மாற்றாக வாக்காளர்கள் தங்களுக்குள்ளேயே ‘தேடி, தெரிந்தெடுத்து’, தகுதியான வேட்பாளர்களை ‘நியமித்து, தேர்ந்தெடுத்தால்’ அவர்கள் மக்களின் உண்மையான ப்ரதிநிதிகளாக செயல்பட வைக்க முடியும். இதனால் நாம் பங்கேற்பு முறை ஜனநாயகத்திற்கு மற்றும் மக்கள் நல ஆட்சிக்கு மேம்பட முடியும்’, என்ற செய்தியை மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று சேர்க்க வேண்டும்:

சமூக வலைதளங்கள், மின்/ அச்சு ஊடங்கள் மூலம் இதைப் பற்றிய செய்திகளை பரப்புரை செய்ய வேண்டும். வீடியோ, பென் ட்ரைவ், லேப்டாப், ப்ரொஜெக்டர் மூலமும் பரப்புரை செய்ய வேண்டும்.

மிக முக்கியமாக பல லக்ஷம் கையேடுகள் அச்சடித்து – சுறுக்கமானதாக சராசரி வாக்காளர்களுக்கும், விரிவானதாக தொகுதிகளில் இந்தப் பணியாற்றக் கூடிய ஆர்வலர்களுக்கும் வழங்கவேண்டும். இதற்கான வரைவு, என்னிடமிருந்தும், உடன் பணிபுறிவோரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களை சிறு குழுக்களாக – 200 லிருந்து 250 வரை, 60 – 75 வீடுகளில் வசிப்பவர்களை ‘மக்கள் மன்றம் - தளம் 1’, ஆக கூட்ட வேண்டும். நகரங்களில் இது ‘தெரு மன்றங்கள்’ ஆகவும், அடுக்கு மாடி குடியிருப்பு மன்றங்கள்’ ஆகவும், க்ராமப்புரங்களில் ‘பஞ்சாயத் வார்ட் மன்றம்’ ஆகவும் இருக்கும்.

இந்த மன்றங்களின் கூட்டங்கள் நடத்தி அவர்களுக்குள் ஒருவரை தேர்வு செய்து அடுத்த தளத்திற்கு தளம் 1 இன் ப்ரதிநிதியாக அனுப்ப வேண்டும். இந்த அடுத்த தளம் – 2, நகரங்களில் ‘ஏரியா மக்கள் மன்றம்’ ஆகவும், க்ராமங்களில் ‘க்ராம மக்கள் மன்றம்’ ஆகவும் இருக்கும். நல்ல பங்கேற்பை உறுதி செய்ய, 2 – 3 அமர்வுக்குப் பிறகு தேர்வுகள் செய்ய வேண்டும்.

இந்தப் ப்ரதிநிதித் தேர்வுக்கான அடிப்படை தகுதிகள்,
அவர் அந்த தெரு, குடியிருப்பு, வார்டில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.   
எந்த முன்னணி – வேரூன்றிய – அரசியல் கட்சி உருப்பினராக அல்லது ஆதரவாளராக இருத்தல் கூடாது.
அடிப்படையில் நேர்மையான, ஊழல்வாதியாக அல்லாதவராக இருத்தல் வேண்டும்.
சமுக, பொதுநலப் பணிகளில் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும்.
மொந்தைக் குடியனாக இருத்தல் கூடாது.

ஜாதி, மத, இன, மொழி, கல்வி, சொத்து போன்றவை தகுதியாக ஏற்கப்படக் கூடாது.

இந்த தளம் 2 ஏரியா மன்றங்கள், தளம் 1 இலிருந்து 10 ப்ரதிநிதிகள் போல் கொண்டதாக இருக்கும் – 2000 – 2500 வாக்காளர்களின் ப்ரதிநிதித்துவத்துடன்.

இதிலிருந்து முன்பு கூறிய முறையில் அடுத்த – ‘பெரிய ஏரியா மன்றங்கள் – தளம் 3’ – க்கு 10 ஏரியா மன்றங்களின் ப்ரதிநிதிகள் போல் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். தளம் 3 – 20000 – 25000 வாக்காளர்களின் ப்ரதிநிதித்துவத்துடன் செயல்படும்.  

சென்னை போன்ற பெரு நகரங்களில் தளம் 3, வார்ட் மன்றங்களாக இருக்கும். சிறு நகரங்களில் தளம் 3 இல் சில வார்ட்கள் கொண்டதாக இருக்கும். துணை மன்றங்களாக ஒவ்வொரு வார்டுக்கும் மன்றங்கள் அமையும். அவை உள்ளாட்சித் தேர்தலில் வார்ட்களுக்கு மக்கள் வேட்பாளர்கள் தேர்வுச் செய்யும்.

தளம் 3 இலிருந்து ப்ரதிநிதிகள் ‘சட்டமன்ற மக்கள் மன்றங்கள் – தளம் 4’ – க்கு தேர்வு செய்யப்படும். தமிழ் நாட்டில் இது 250,000 வாக்காளர்களின் ப்ரதிநிதித்துவம் கொண்டதாக இருக்கும். தளம் 3 இலிருந்து 10 ப்ரதிநிதிகள் தளம் 4 இல் அமர்வர். மற்ற மானிலங்களில் சட்ட மன்ற வாக்காளர்கள் எண்ணிக்கையை பொருத்து தளம் 3 மற்றும் தளம் 4 க்கு உறுப்பினர் எண்ணிக்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்.  உதாரணமாக: 150,000 உறுப்பினர் கொண்ட சட்டமன்றம் கொண்ட மாநிலத்தில் தளம் 4 இல் 8 உறுப்பினர்கள் தளம் 3 இலிருந்து – 19000 வாக்காளர்களின் ப்ரதிநிதியாக, மற்றும் தளம் 3 இல் 8 - 9 உறுப்பினர்கள் தளம் 2 இலிருந்து – 2375 – 2110 வாக்காளர்களுக்குப் ப்ரதிநிதியாக அமைவர்..

நாடாளுமன்ற மக்கள்மன்றம் - தளம் 5 – இல், தளம் 4 இலிருந்து தேர்வு செய்யபட்ட ப்ரதிநிதிகள் பங்கேற்பர். தமிழ் நாட்டில் இதில் 6 ப்ரதிநிதிகள் இருப்பர். இது 1,500,000 வாக்காளர்களுக்கான ப்ரதிநிதித்துவம் பெற்ற தளம். 

இந்த மன்றங்கள் மேலும் கீழுமாக தேடி, ஆய்ந்து, மக்களின் வேட்பாளர்களை, மூன்று தள ஆட்சிமன்றங்களுக்கும் நியமிக்கும். ஒருமனதாக தேர்வு செய்ய முயற்சி செய்ய வேண்டும். அப்படி முடியாத நிலையில், தேர்தல் முறையில் முடிவுகள் எடுக்கலாம்.

தேர்தல் சமயத்தில் நியமனம் நிராகறிக்கப்படுவதை, மற்றும் கடைசி நிமிஷத்தில் வேட்பாளர் விலகிக் கொள்வதை, ஈடு செய்ய, ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு பேர் தேர்வு செய்து, ஒரு வேளை முதலாமவரின் நியமனம் நிராகறிக்கப்பட்டால், அல்லது அவர் விலகினால், இரண்டாமவர் மக்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும்.

தேர்தலின் போது சாதாரணக் காகிதத்தில் ஒருவண்ண நோட்டீஸ் மூலம் மக்கள் வேட்பாளர் யார் என்பதை அறிவித்தால் போதும். பலவண்ணக் கையேடுகள், பகட்டான பரப்புரைகளெல்லாம் தேவைப்படாது. இவை தேர்தல் செலவை வெகுவாகக் குறைக்க உதவும். 

தேர்தலில் குளருபடி செய்து மக்கள் வேட்பாளர்கள் வெற்றிபெற முடியாமல் தடுக்கப்பட்டாலும், இந்த வேட்பாளர்கள் தான் மக்களின் முடிசூடா ப்ரதிநிதிகளாக ஏற்கப்படுவர். மக்கள் தங்கள் ப்ரச்னைகளை இவர்களிடம்தான் கொண்டு செல்வார்கள். இவர்கள் மக்களின் ப்ரச்னைகளைப் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல அங்கீகறிக்கபடுவர். நாளடைவில் கட்சி நாமஉ, சமஉ வெல்லாம் மக்களிடம் மதிப்பிழந்து உதிர்ந்து போகும் நிலை ஏற்படும். மக்கள் வேட்பாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகும்.

மக்கள் மன்றங்கள் முறையான பதிவு பெற்று நடை முறையில் ஏற்றுக் கொள்ளப் பட்டு, அடிக்கடி கூடி விவாதித்து பொதுப் பணிகளில் முடிவுகளெடுக்க முடியும். மக்கள் வேட்பாளர்கள் ஆட்சிமன்றங்களில் பெரும்பான்மை பெற்றதும் அரசியல் சாசனம், ஆர் பீ ஏ போன்றவற்றில் தேவையான சட்ட மாற்றங்களை கொண்டு வந்து மக்கள் மன்றங்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் அளிக்க முடியும். 

இந்த மன்றங்கள் நம் ஆட்சிமன்ற ப்ரதிநிதிகளை தேர்வு செய்வது மற்றும் கண்காணிப்பதைத் தவிர தினப்படி ப்ரச்னைகளை – குப்பை அகற்றுதல், குடிநீர், வடிகால், சுத்தம் செய்தல், நீர்நிலைகள், நீர்வழிகளை தூர்வாரி பராமரிப்பது, சாலை, கல்விச்சாலைகள், மருத்துவ சாலைகள் பராமரிப்பு, என்று அனைத்திலும் மக்களின் தேவைக்கும் அரசு யந்த்ரத்திற்கும் இடையே பாலமாக செயல்படும்.

அதிகாரம் படைத்தவர்கள் தங்கள் பணியை செய்யத் தவரும் போது மக்கள் மன்றங்களே அவற்றை முன்வந்து செய்து, பின் அரசிடமிருந்து வரிவிலக்கு பெற்று நிலைமையை சரிசெய்து கொள்ளும். அரசின் கொள்கைகள், செயல்பாடுகளினால் ஏற்படும் தீமைகளை தவிர்க்க இந்த அமைப்பு பேருதவியாக இருக்கும்.

ஆக, மக்கள் வேட்பாளர்கள் ஆட்சி மன்றங்களில் சென்றமருமுன்னறே, ஆட்சி அதிகாரம் மக்கள் கையில் நேரடியாக வந்து சேரும்.

ஸ்டெர்லைட், 8 வழி சாலை, கூடங்குளம், நூட்ரினோ, வெள்ளம், புயல், வரட்சி, ஆழிப்பேரலை, எதுவாக இருப்பினும், அரசு தன் கடமையை செய்கிறதோ, இல்லையோ, இந்த மக்கள் மன்றங்கள் முன்நின்று மக்கள் உரிமையை பாதுகாப்பதும், மீட்பு, மீளமைப்பு என்று எல்லா வகையிலும் மக்கள் நலனுக்காகப் பாடுபடும்.

இதுதான் மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் உண்மையான ஜனநாயகமாகப் பரிமளிக்கும். இதை செய்ய அரசியல் சாசனத்திலோ, ஆர் பீ ஏ விலொ வேறு எந்தச் சட்டத்திலும் எந்தவித மாறுதலும் தேவை இல்லை.

இதன் மூலம் ப்ரதிநிதித்துவ ஜனநாயகத்திலிருந்து, உன்னதமான பங்கேற்புமுறை ஜனநாயகத்திற்கு மேம்படுவோம்.

திரும்பி அழைக்கும் உரிமையும், சட்ட திட்டங்களுக்கு மக்களின் ஆதரவை, அங்கீகாரத்தை கணிக்கும் வசதியும் இதன் மூலம் உபரியாகக் கிடைக்கும். ஜனநாயகத்தின் உண்மையான பலனை அனுபவிக்க முடியும்.

உலகமே நம்மைப் பார்த்து பொறாமைப்படும், நம்மை பின்பற்ற எத்தனிக்கும்.

சில செய்ய வேண்டியன, செய்யக்கூடாதன:
நம்மை நாமே முன்னிருத்தக்கூடாது.
நம்மையும், நம் சொந்தத் தேர்வையும் மக்கள் ப்ரதிநிதியாக ஒருபோதும் திணிக்க முற்படக்கூடாது. மக்கள் நம் தேர்வை ஒரு போதும் ஏற்கப்போவதில்லை.
அவர்களே தேர்வு செய்யட்டும். அப்போதுதான் அவர்கள் அந்த வேட்பாளர்களை சொந்தம் கொண்டாடி வெற்றிபெறச் செய்வர்.
நாம் பின்னிருந்து மக்களுக்கு உதவ, ஊக்குவிக்க மட்டும் வேண்டும்.
ஆர்வலர்களுக்குள்ளும் மன்றனங்களிலும் பூசல்களை தவிர்க்கவேண்டும். எப்போதும் ஒருமனதாக தேர்வு செய்வதும், முடிவெடுப்பதும் தான் நன்மை பயக்கும்.
மொழி, இன, ஜாதி, மத, வர்க அடையாளங்களை தவிர்க்கவும். ப்ரதிநிதிகள் மக்களின் பொதுவான நன்மையையே முன்னிருத்திப் பணியாற்ற வேண்டும்.
தம்மைத் தாமே நியமித்துக் கொள்வதையும், சிபாரிசு செய்வதையும் ஊக்குவிக்கக் கூடாது.
நாம் - ஆர்வலர்கள் – கூட்டங்களை கூட்டுவது, நடவடிக்கைகளை கண்காணிப்பது, வழிகாட்டுவது தவிர நேரடியாக ப்ரதிநிதிகளை தேர்வு செய்வதில் ஈடுபடக்கூடாது.

பயணத்தைத் துவங்குவோமா தோழர்களே?

K. Raja Rajan   

(A technologist by qualification, farmer by option and a Gandhian by conviction)
President – Gandhian Initiative for Social Transformation - Chennai
Ph: 94441 60839,  Email: letsbelldcat@gmail.com
Face book: Raja Rajan K,   Blog: prithvi-mithra.blogspot.in